படப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி

Submit New Post!

312322_487215194652872_1146760660_n

தன்னையே பரிபூரனமாக நம்பும் அடியவர்களுக்கு அருளுவதே அவரது முழுநேர வேலை. பெரியவாள் பக்தர் மண்டலத்தில் ஒருவர் படப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி. இளம் வயதில் கணவரை இழந்து நடமாடும் தெய்வமே கதியென வாழ்ந்த உத்தமி. மதுரையைச் சேர்ந்த இந்த பக்தைக்காக பெரியவாள் புரிந்த அருள் மகத்தானது.

ஒரு சமயம் பாட்டி தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமியின் மனைவி பூஜை செய்வதை அறிந்து அங்கு சென்றார். அந்த பெண் அரசமரத்திற்கு பூஜை, பிரதட்சணம் செய்து பெரியவா திருஉருவப்படங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது பாட்டி பூஜையில் வைக்கப்பட்டிருந்த மஹானின் திருஉருவப்படத்தை பார்த்து ஆனந்தித்து தனக்கும் ஒரு படம் கொடுக்குமாறு வேண்ட அவள் ‘எல்லாம் வினியோகம் ஆகிவிட்டது. இது ஒன்று தான் எங்கள் வீட்டு பூஜையில் இருக்கிறது’என்று கூற ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் பாட்டி. ஆனால் கருணைக்கடல் சும்மா இருக்குமா! அன்றே துரைசாமியின் மனைவி கனவில் வந்து பூஜையில் உள்ள படத்தை உடனே பாட்டியிடம் சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டார். அதன்படியே அந்த அம்மையார் செய்தார். அது முதல் அந்த திரு உருவப்படத்துடனேயே பாட்டியின் அன்பும், பூஜையும் தொடர்ந்தது.

தன் உடமைகளை எல்லாம் அந்த மஹாதெய்வத்திற்கே அர்ப்பணித்தார் அந்தப் பாட்டி.

ஒருமுறை பாட்டி மதுரை மீனாட்சிக்கு லட்சார்ச்சனை செய்து அதற்கு பூர்த்தியாக ஹோமம் செய்யும் தருவாயில் பசும் நெய் கிடைக்காமல் பரிதவித்த சமயம் அதுவரை பார்த்திராத நபர் ஒருவர் வந்து பசும் நெய் பாட்டிலைக் கொடுத்து ஹோமம் சிறப்பாக நிறைவேற உதவி செய்ததும் அவர் அருள் விளையாட்டே.

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2017 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?