நாராயணீயம் மகிமை

Submit New Post!

Periyava-with-vilvam

சொன்னவர்: திரு சுந்தர்ராஜன்.

திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத் தவிப்பில் இருந்தார்.

1969 ஜனவரி 24-ல் தினமும் இரவில் தாங்க முடியாத தலைவலி இவரை வாட்டியது. சுமார் 10 மணி முதல் 11 மணி வரை தினமும் இரவில் இப்படி வலி வந்து சுந்தர்ராஜன் தவிப்பது வழக்கமாகி விட்டது. ஒரு வேளை மூளையில் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் இந்த தலைவலியின் வேகம் இருந்தது. ஒரு மாத காலம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இவர் டில்லியிலிருந்து ஐதராபாத்துக்கு பிப்ரவரி 15-ஆம் நாள் வந்து சேர்ந்தார்.

விஜயவாடாவிலிருந்து இருபது கி.மீ.தூரத்தில் இருந்த தெலாபொரலு என்ற கிராமத்தில் ஸ்ரீபெரியவாளை தரிசித்தார்.

மாலை சுமார் நாலு மணிக்கு ஸ்ரீபெரியவா விஸ்ராந்தியாக படுத்துக் கொண்டிருந்தபோது இவர் ஸ்ரீபெரியவா முன்பாக நின்றார்

‘உனக்கு பிரஹசரணம்னா தெரியுமா?’ என்று ஸ்ரீபெரியவா கேட்டார்

சம்பந்தமில்லாத கேள்வியாக இது இவருக்குத் தோன்றவில்லை.

ஏனென்றால் இவர் வடமாள் பிரிவைச் சார்ந்தவராயிருந்தாலும் இவரது மனைவி பிரஹசரணம் பிரிவைச் சார்ந்தவள். அதை சுட்டுக்காட்டவே ஸ்ரீபெரியவா இப்படிக் கேட்பதாக இவருக்குப் புரிந்தது. ஸ்ரீபெரியவாளிடம் தான் இப்படி மணந்து கொண்டதாகத் தெரிவித்தார்

பின் இவர் தன்னுடைய தலைவலி உபாதை பற்றிக் கூறி அதற்காகவே பிரத்யேகமாக ஆபீஸில் விடுப்பு எடுத்து ஸ்ரீபெரியவாளிடம் வந்திருப்பதாகவும் அதற்காக பிரபு தயவு செய்து உபாயம் கூறவேண்டுமென்றும் வேண்டி வணங்கினார்.

‘உனக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியுமோ?’

என்று ஸ்ரீபெரியவா கேட்க இவர் வெட்கத்துடன் ஸம்ஸ்க்ருதம் படிக்காததைக் கூறினார்.

‘நீ தினமும் நாராயணீயத்திலே ஒரு தஸகம் படிச்சுண்டு வா’ என்று அனுக்ரஹித்து அனுப்பினார். [தஸகம் = 10 ஸ்லோகங்கள்]

இவர் உத்தரவு வாங்கிக் கொண்டு தன் காரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பெண்மணி ஓடிவந்தாள்.

‘பெரியவா என்னை உங்க காரிலே விஜயவாடா வரை போகச் சொன்னார்’ என்று சொல்ல இவரும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

விஜயவாடா வந்ததும் அந்தப் பெண்மணி தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து இரவு உணவு உட்கொண்டுதான் போக வேண்டுமென கேட்டுக் கொண்டார். ஆனால் இவருக்கோ ஒரே பயம். அங்கிருந்து ஐதராபாத்துக்கு விரைவாகச் சென்றாலும் இரவு பத்து மணியாகிவிடும் – இரவு பத்து மணிக்கு தினமும் வரும் தலைவலி வந்துவிடுமே என்பதுதான் அந்தப் பயம்.

‘ரொம்ப நேரமாகாது. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த மாது அக்ரஹாரத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒவ்வொரு பலகாரமாக வாங்கிவந்து சுவையாகப் பரிமாறினாள்.
பதினைந்து நிமிடத்தில் சாப்பிட்டு இவர் புறப்பட்டு ஐதராபாத்துக்கு இரவு 10 மணிக்கு பயத்துடன் போய் சேர்ந்து தலைவலியை எதிர்பார்த்தார்.

ஆனால் தலைவலி எங்கு போனதோ? வருமோ வருமோ என்று பயந்து சென்ற மாதங்களில் தவித்த அந்தத் தலைவலி அன்று வரவேயில்லை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைதீஸ்வரரிடம் முறையிட்டதற்கே இப்படி ஒரு பலனா என்று சுந்தரராஜனுக்கு ஒரே வியப்பு.

சரி ஏதோ இன்று மட்டும் வராமல் விட்டு விட்டு நாளை வரலாமென்ற பயமும் சந்தேகமும் இல்லாமலில்லை. ஆனால் அன்றென்ன என்றென்றும் அதன்பின் தினமும் இரவு 10 முதல் ஒரு மணி நேரம் வரை உயிரை எடுத்த தலைவலி எப்படி மாயமானதோ அது மருந்தீஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு மட்டுமே தெரிந்த மகிமை.

ஸ்ரீபெரியவாளின் திருவாக்கின்படி இவர் அவ்வருடம் மார்ச் மாதம் 7ஆம் தேதிஸ்ரீகுருவாயூரப்பன் சன்னதியில் நாராயணியம் பாராயணத்தை ஆரம்பித்தார்.

நூறு நாட்கள் பாராயணம் செய்வதற்குள் இவரால் நாலு திருமணங்கள் மங்களகரமாக நிச்சயித்து நடக்கப்பட்டதென்றும், அவர்கள் யாவரும் இப்போது சஷ்டி அப்தபூர்த்தி செய்து வாழ்வது ஸ்ரீபெரியவாளின் அருளால்தான் என்கிறார் இந்த பக்தர்

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?