நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்

Submit New Post!

312322_487215194652872_1146760660_n

நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள்.

ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து” யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?”என்று வினவினார். அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள்.

அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்” இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மாஹாஸ்வாமிகள்.

கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?