காக்க… காக்க…

Submit New Post!

periyava-1
ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது.

’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது” என்றார்.

பெரியவா மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஒரு பெண் கல்யாணதுக்கு இருக்கா… ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. அநாதயா போயிடுமோன்னு கவலையா இருக்கு….”

பெரியவா சொன்னார்கள்… “தினமும் காக்கைக்கு சாதம் போடனும்… தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்… சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணனும்…”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா விஸ்தாரமாகப் பேசினார்கள்.

நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு இல்லப் பிராணியும் வருது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை… அதற்கு பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்… தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லை…”

பெரியவா புன்முருவல் பூத்தார்கள். பிறகு சொன்னார்கள் “அகத்திலே காக்கைக்குச் சாதம் போடுகிறபோது – காக்காய்…காக்காய்.. காகம், காகம்.. வா, வா -ன்னு கூப்பிடறதில்லை. அப்படித்தானே…

”ஆமாம்”

“என்ன சொல்றா?” – பெரியவா

“கா… கா.. ங்கிறா…

”அப்படின்னா என்ன அர்த்தம்?”

எல்லோரும் விழித்தார்கள்.

“காக்கா… சாப்பிட வா-ன்னு அர்த்தம்…” என்று ஒரு தொண்டர் கூறினார்.

‘அதுதான் எல்லருக்கும் தெரிஞ்சிருகே ! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.’

எல்லாரும் மெளனமாக நின்றார்கள்.

“கா…கா…ன்னா.. காப்பாற்று, காப்பாற்றுன்னு அர்த்தம்.. பித்ருக்கள் எல்லரும் காக் ஸ்வரூபமா வருவதாக ஐதீகம். “கா…கா….ன்னா – பித்ருக்களே… எங்களை ரட்சியுங்கள்” என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரம்மித்தார்கள்.

”அது மட்டுமில்லை. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான். காக்கையிடமும் அப்படித்தான். பகவனுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லெ. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. எதோ ஒரு ஜீவன்… வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு – நமக்குள் இருக்குற அதே ஆத்மாவுக்கு – ஸ்வரூபம் வேறே – சாதம் போடுகிறோம். இது, அத்வைதம் தானே???

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறது.

உம்மாச்சி தாத்தா சரணம்…!!!

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2018 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?