கலியுகம் கண்ட காஞ்சி மஹான்

Submit New Post!

10622806_10202824436274764_6890996375184933432_n

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள் கூறியதன் உண்மைப் பொருள்தனை நாம் நன்றாக அறியமுடிகிறது.

அவ்வண்ணம் வந்தது தாம் தான் என்பதை நமக்கு சான்றென தரவே பற்பல மஹான்கள் அவர்களது பொழுதுகளில் மற்ற மஹான்களைப் போலவே தோன்றி நம்மை அறியவைத்திருக்கின்றனர் போலும்.

ஆயினும் கூட கலியுகத்தில் பிறந்ததாலோ என்னவோ மஹான்கள் நம்மிடையே ஸ்தூல ரூபமாய் இருக்கும் பொழுதினை விடவும் பற்பல மடங்கு அவர்கள் சூக்ஷுமமாய் இருக்கும் பொழுதினில் பெரிதாய் உணர்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆயினும் என்ன? இன்றாவது வாழ்வில் உணர்ந்தோமே என்ற ஆஸ்வாசம் மேலிட நம் மனம்:

மஹா பெரியவா சரணம்! மஹா பெரியவா சரணம்! மஹா பெரியவா சரணமென! கூவுகிறது…
நம் வீடாகுமே உந்தன் திருச்சந்நிதி
எம் இரு விழி நீரே உமக்கு புஷ்பாஞ்சலி
இங்கு மணம் வீசுது உம் பெயர் ஒலிக்குது
உம்மை வலம் வரும் போதிலே மனம் லேசாகுது
தவமாக நீரிருக்க அமைதியும் சேருது
ஏன்னென்று புரியாமல் மனம் நடுங்குது
அறியாமல் உம் நாமம் வெளி வருகுது
என்ன வரம் வேண்டிடினும் உடன் கிடைக்குது
சொன்னவுடன் சோதனையும் விலகி ஓடுது
அள்ள அள்ளக் குறையாத அருளும் பெருகுது
சொல்லவொண்ணா ஆனந்தத்தில் மனமும் துள்ளுது
எம் குருவே தாயே நீர் தான் எம்மை ஆள்வது ….
உம் கோயில் வலம் வந்து என்றும் நலம் காண
உம் புகழ் என்றும் பாட உம்மை வேண்ட
எம் மனதாலே நாம் செய்யும் ஆராதனை
இது தானே என்றென்றும் எம் பிரார்த்தனை.

Dedicated to Sri Maha Periyaval on HIS 121st Jayanthi.
Dr.Krishnamoorthi Balasubramanian.

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?