என்றும் நீயே நிரந்தரம்

Submit New Post!

248187_400699886637737_1809820008_n

எந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும்
உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும்
உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை வேண்டும்
எந்தன் மடமைகள் தவிர்த்து மாற்றத்தை நீயும் தர வேண்டும்
ஒவ்வொரு நொடியும் போற்றிப் பணிவேனே நானுனை
அமைதியை தந்து ஆண்டருள்வாயே நீ எனை
உந்தன் தரிசனம் அல்லாத வரம் ஒன்றும் வேண்டாத வரம் வேண்டும்
எந்தன் மனதினில் ஆசைகள் சூழாத நிலை நீயும் தர வேண்டும்
நிரந்தரமில்லாத வாழ்க்கையை வாழ்வதில் துணை வேண்டும்
அதில் வெற்றியை நானும் கண்டிட உன் அருள் தர வேண்டும்
நிலை மாற்றங்கள் என்றும் பாதிக்காத நிலை வேண்டும்
என்றும் நீயே நிரந்தரம் என்பதை நானும் உணர்ந்திட உன் அருள் வேண்டும் – Indu Iyer

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?