இது தான் பக்தி. இது தான் அருள்

Submit New Post!

periyava-1

ஒரு கோனார் தினமும் நடமாடும் தெய்வத்திற்கு பசும்பால் கொடுத்து வந்தார். அவர் மனைவி வயிற்றில் ஏதோ கட்டியால் கஷ்டப்பட்டு வந்தாள். பெரியவாள் அந்த ஊரை விட்டுக் கிளம்புவதற்குள் மனைவியின் உடல்நிலை பற்றி பெரியவாளிடம் கூறும்படி கோனாரிடம் உடனிருந்தவர்கள் சொன்னார்கள். பரம பக்தரான அந்த அன்பர் அநித்தியமான இந்த உடலையும் அதன் உபாதைகளையும் பரம் பொருளிடம் சொல்ல விரும்பவில்லை. இதுவன்றோ உயர்ந்த பக்தி. ஆனால் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லாத பரம்பொருளானா மஹாபிரபுவும் மௌனமாகவே இருந்தார்.

பக்தரின் மனைவிக்கு உடல் நிலை மோசமாகி உறவினர்கள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பால்கார பக்தரோ பெரியவாள் ஊரைவிட்டு கிளம்பும் வரை பால் கைங்கர்யம் செய்து விட்டு அவர் கிளம்பியபிறகே சென்னை வந்து மனைவியை பார்த்தார். மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்வதற்காக சோதனை செய்த போது என்ன அதிசயம் என்றால் அந்த அம்மையாருக்கு வயிற்றில் கட்டி எதுவும் இல்லாமல் குணமாகி இருந்தது தான். தனக்கு தினம் வயிறார பால் கொடுத்த பக்தரின் குடும்பம் அவதியுறவிடுவாரா நமது கருணை மலையான மஹாபெரியவாள்!

ஆயர்பாடியில் அன்று கிருஷ்ணராய் அவதரித்து அருள் செய்த ஜகத்குருவன்றோ நம் நடமாடும் தெய்வம்.

தனக்கு தினம் பால் வார்த்ததற்கு அவர்கள் வயிற்றில் பால் வார்த்தார் ஆப்ரேஷன் ஏதும் இன்றி உபாதையை குணப்படுத்தினார். இது தான் பக்தி. இது தான் அருள் என்பதற்கு உதாரணமானது தான் இந்த நிகழ்ச்சி

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?