அம்பாளுக்குச் செய்கிற அலங்காரம்

Submit New Post!

481451_539247882782936_1589289807_n

நம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள்.

இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு இதைத் தேடிக்கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.

உடைமைகளைச் சேர்த்துக் கொள்ள, சேர்த்துக்கொள்ள பயம் தான் ஜாஸ்தியாகிறது.

தன் பெண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்கு உள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் புருஷனுக்குக் கௌரவம். இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருக்கமுடியாது என்று கூறவேண்டாம்.

கர்மானுஷ்டானங்களைப் பண்ணும் போதும், “நாம் பண்ணுகிறோம்” என்ற அகம்பாவத்தோடு பண்ணக் கூடாது.

கர்மாவைப் பண்ணக்கூடிய சக்தியை நமக்கு பகவான் கொடுத்தான், அதற்கு வசதியும் கொடுத்தான் என்று நினைத்து, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணவேண்டும்.

அம்பாளுக்குச் செய்கிற அலங்காரம் தான் நமக்கு அழகு. நமக்கே செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்துக்குத்தான் வழிகாட்டும்.

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?