அபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி

Submit New Post!

250876_416874178353641_945978126_nஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம் பண்ணினார். எல்லார் வீட்டிலும் பூர்ணகும்ப மரியாதை பண்ணினார்கள். இவன் வீட்டிலும் பூர்ணகும்பம் குடுத்துவிட்டு எல்லாரும் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். இந்தப் பையனும் புதுப்பூணூல் ஜோரில் “அபிவாதயே” சொல்லி பெரியவாளை நமஸ்கரித்தான்.

“அபச்சாரம்! அபச்சாரம்! டே, அம்பி! பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்றச்சே அபிவாதயே சொல்லப்டாதுடா !”

பக்கத்தில் பல குரல்கள் ஏககாலத்தில் ஒலித்தன. பையன் மனஸில் ஓடிய என்னமோ,

“பூணூல் போட்ட வாத்யார்தானே பெரியவாளப் பாத்தா அபிவாதயே பண்ணுன்னு” சொன்னார் ! இவா என்னடான்னா பண்ணப்டாதுங்கறாளே !

அப்போ இவா பெரியவாளா? இல்லையா?” அந்தர்யாமி சிரித்துக்கொண்டே, “ஒனக்கு என்னைப் பாத்ததும் பெரியவாளா, இல்லியான்னு சந்தேஹம் வந்துடுத்தோல்லியோ?”.

பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்னது இது? X-ray மாதிரி சொல்றாரே! பையனை முன்னிட்டு எல்லாருக்கும் திருவாய் மலர்ந்தார்.

“அபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி. அந்தக்காலத்ல மனுஷாள்ளாம் மாப்பிள்ளைய, நீலத்தனல்லூர் சந்தைல, மாடு வாங்கறா மாதிரி, வாங்க மாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா, அதுனால

“அபிவாதயே” மூலமா, இவன் இன்ன கோத்ரம், இன்ன சூத்ரம், இன்னார் பையன்ன்னு தெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா? வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா.

நானோ சன்யாசி. எனக்கு பொண்டாட்டி, பொண்ணு இல்லே, ஒனக்குக் குடுக்க. அதுனால அபிவாதயே சொல்றது அவஸ்யம் இல்லியே ஒழிய, தப்பு இல்லே, புரிஞ்சுதா?”

அழகாக அன்பொழுக நடுரோடில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சி தாத்தா

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?